Total Pageviews

Thursday, 13 October 2011

ஏன் சொல்ல மாட்டார்? இவர் பின்பற்றுவது மகாத்மா காந்தியை அல்லவே...!



தொழிலதிபர்களைச் சிறையில் அடைப்பதால் இந்தியாவுக்கு முதலீடு வாய்ப்புகள் தடைபடுகிறது' என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ள கருத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

யூனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, 2ஜி வழக்கில் சிறையில் உள்ள ஸ்வான் டெலிகாம் இயக்குநர் வினோத் கோயங்கா ஆகியோரது ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்குரைஞரிடம் நீதிபதிகள் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்ததுடன், "தொழிலதிபர்களைச் சிறையில் தள்ளுவதில் நாங்கள் அதிக ஆர்வம் காட்டுவதைப் போன்ற தோற்றத்தை அமைச்சரின் கருத்து உருவாக்கியுள்ளது. அவர் பேசியது உண்மைதானா? உண்மையென்றால், அது எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது' என்று கூறியுள்ளனர்.

சில விவகாரங்கள் தீவிரமாகப் பேசப்படும்போது, எதையாகிலும் ஒன்றைச் சொல்லி, மக்கள் கவனத்தைத் திசைதிருப்புவதில் அரசியல் கட்சித் தலைவர்கள் கைதேர்ந்த நிபுணர்கள். காங்கிரஸில் இதுநாள்வரை திக்விஜய் சிங், மணிஷ் திவாரி, கபில் சிபல் போன்றவர்கள்தான் இப்படிப்பட்ட அதிர்வுக் கருத்துகளுக்குப் புகழ் பெற்றவர்கள். இப்போது அமைச்சர் குர்ஷித்தும் இந்த வரிசையில் சேர்ந்து கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது.

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரரும் சன் டிவி நிர்வாக இயக்குநருமான கலாநிதி மாறன் ஆகியோர் மீது 2ஜி ஒதுக்கீடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருக்கும் நாளில் அமைச்சர் குர்ஷித் இப்படி ஒரு கருத்துத் தெரிவித்திருப்பது எதற்காக என்பது ஒருபக்கம் இருக்கட்டும். உண்மையில் தொழிலதிபர்களைச் சிறையில் அடைத்தால் முதலீடுகள் வராமல் ஸ்தம்பித்துவிட்டதா என்று பார்த்தால் அப்படியேதும் நடந்துவிட்டதாகத் தெரியவில்லை.

இந்தியாவில் குறிப்பிடத்தகுந்த தொழிலதிபர்கள் எத்தனை பேர் தற்போது சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று விரல்விட்டு எண்ணிவிடலாம். அதுவும்கூட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி கட்டுமானம் மற்றும் கொள்முதலில் ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டிருப்பவர்கள்தான். அனைவரும் அறிந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ராமலிங்க ராஜு, கர்நாடகத்தில் கனிமச் சுரங்க அதிபர் ஜனார்த்தன ரெட்டி இவர்களைத் தவிர வேறு பெருந்தொழிலதிபர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. அப்படியே இவர்களைக் கைது செய்திருப்பதால், அவர்கள் சார்ந்துள்ள நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கிறதா என்றால் அப்படியும் ஏதும் நடக்கவுமில்லை.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தங்களது நிலத்தையோ, வீட்டையோ அடமானமாக வைத்துக் கடன் வாங்கிய தனிநபர்கள், அந்தக் கடனைத் திருப்பித்தர முடியாமல் போகும்போது, அடமானமாகத் தரப்படும் வஸ்து ஏலத்தில் விடப்படுகிறது. அதுவரை சரி. ஐந்து லட்சமும், பத்து லட்சமும் பெறுமானமுள்ள கடனைத் திருப்பித்தர முடியாமல் தங்களது சொத்துகள் ஏலம் விடப்படுவதைப் பார்த்து மனம் நொந்து போவது போதாது என்று, அவர்களது படங்களுடன் சம்பந்தப்பட்டவர்களின் மானத்தையும் நமது வங்கிகள் ஏலம் விடுகின்றனவே, இது சரிதானா என்கிற கேள்வியை எழுப்பாதவர்களே கிடையாது.

தனிநபர் ஒரு சில லட்சங்கள் கடன் வாங்கிக் கடனைத் திருப்பித்தர முடியாவிட்டால், அவர்களது அடமானத்தை ஏலத்தில் விடுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல் படத்தையும் விளம்பரப்படுத்தி அவமானப்படுத்தும் அதே வங்கிகள், எந்தவித ஈடோ உத்திரவாதமோ இல்லாமல் பல கோடி ரூபாய் மக்கள் பணத்தை ஸ்வாகா செய்துவிட்டு, யோக்கியர்களாக வலம்வரும் பல தொழிலதிபர்களை மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில்லையே, ஏன்?

இந்தக் கேள்விக்கு ஒரு விசித்திரமான பதிலைத் தந்து தொழிலதிபர்கள் மீதான தனது அக்கறையை வெளிப்படுத்திக் கொண்டார் இன்றைய உள்துறை அமைச்சரும் அன்றைய நிதியமைச்சருமான ப. சிதம்பரம். அதற்கு அவர் தந்த விளக்கம் - ""பெரும் தொழிலதிபர்களை அவமானப்படுத்தினால், அவர்களது நிறுவனத்தின் பங்குகள் சரிந்துவிடவும், அதனால் அந்த நிறுவனமே பாதிக்கப்படவும் வழிகோலியதாகும். அதனால் பல ஆயிரம் தொழிலாளர்களின் நலன் பாதிக்கப்படக்கூடும்!''

இந்தியாவின் முன்னணித் தொழில் நிறுவனங்கள் பலவும் பல்வேறு வங்கிகளில் பெரும் தொகையைக் கடனாகப் பெற்று, அதற்கு வட்டியும் கொடுக்காமல், அசலையும் செலுத்தாமல் தாங்கள் நஷ்டமடைவதாகக் காரணம் காட்டி, ஆட்சியாளர்களின் ஆசியோடு, வாங்கிய கடனில் பாதிப் பணத்தை மட்டும் வட்டியில்லாமல் கட்டியிருப்பவைதான் என்பது ஒரு விசாரணை வைத்தால் வெட்டவெளிச்சமாகிவிடும். இப்படி மக்கள் வரிப்பணத்தைத் தங்களது ஆடம்பர வாழ்க்கைக்கும், வியாபார சூதாட்டத்துக்கும் பயன்படுத்தி வளையவருபவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்று வாதிடும் அமைச்சர்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறிக்கொள்ளும் வேடிக்கை இந்தியாவுக்கு மட்டுமே இருக்கும் தனித்துவங்களில் ஒன்று.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வாராக்கடன் கடந்த நிதியாண்டின் முடிவில் ரூ. 71,047 கோடி. இது கடந்த ஆண்டைவிட ரூ. 14 ஆயிரம் கோடி அதிகம். இதில் ஏறத்தாழ ரூ. 50 ஆயிரம் கோடி கார்ப்பரேட் நிறுவனங்கள் தரவேண்டிய வாராக்கடன். இந்தக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் வக்காலத்து வாங்குகிறார்கள் அமைச்சர்களான ப. சிதம்பரமும், சல்மான் குர்ஷித்தும்.

அது தனிநபராக இருந்தாலும் சரி, கார்ப்பரேட் நிறுவனங்களாக இருந்தாலும் சரி சட்டமும் நியாயமும் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும்? நியாயமும் தர்மமும் இலலாத வியாபாரம் என்பது மோசடி என்று கருத்துத் தெரிவித்த காந்தி பிறந்த மண்ணில் கதர்ச் சட்டை அணிந்து, காங்கிரஸ்காரராக வளையவரும் அமைச்சர் சல்மான் குர்ஷிதா சொல்வது, தொழில் அதிபர்களைக் கைது செய்யக்கூடாது என்று?

ஏன் சொல்ல மாட்டார்? இவர் பின்பற்றுவது மகாத்மா காந்தியை அல்லவே...!

Saturday, 1 October 2011

“சத்யசோதனை” மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869 – 1948)


அஹிம்சை போராட்டம் மூலம் எதையும் சாதிக்கலாம் என்று உலகிற்கு நிரூபித்தவர் மஹாத்மா அவர்கள். வன்முறை எதற்கும் தீர்வாகாது என்று உலகிற்கு உணர்த்தியவரின் சில புகைப்படங்கள். இவருடைய “சத்யசோதனை” புத்தகம் அனைவருக்கும் ஒரு சிறந்த வழிக்காட்டி.
குழந்தையாக மோகன்தாஸ்
1 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)சிறுவனாக
2 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)இளைஞராக
3 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)வக்கீலாக
4 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)
5 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)
6 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)தென் ஆப்ரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு மனைவி கஸ்துரிபாயுடன்
7 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)தென் ஆப்ரிக்கா நண்பர்களுடன்
8 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)தென் ஆப்ரிக்கா நண்பர்களுடன்
9 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)கஸ்தூரிபாய் அவர்களுடன்
10 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)
பொதுமக்களுடன் உரையாடல்
11 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)ரயிலில் அமர்ந்து குதூகலமாக பேசுகிறார்
12 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)இங்கிலாந்து ல் டவ்னிங் தெரு என்ற இடத்தில்
13 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)இங்கிலாந்து ல் டவ்னிங் தெரு என்ற இடத்தில்
14 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)பேச்சை கேட்டு கொண்டு இருக்கும் அவருடைய அபிமானிகள்
15 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)
உப்பு சத்யாகிரகத்தில்
16 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)தண்டி யாத்திரையில்
17 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)உப்பு எடுக்கும் மஹாத்மா
18 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)அமைதியான முகத்தோடு ஒரு அட்டகாச புன்முறுவல்
19 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)ஆதரவாளர்களுடன் ரயிலில்
20 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)
மானு மற்றும் அபாவுடன்
21 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)கான் அப்துல் கபார் கான் உடன் ஒரு நடை
22 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)மானுவும் அபாவும் மஹாத்மாவுக்கு தோள் கொடுத்து உதவுகிறார்கள்
23 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)மாதாத்மா நேருவுடன் ஒரு சந்தோஷ தருணத்தில்
24 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)முக்கிய கலந்துரையாடலின் போது
25 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)
உப்பு சத்யாகிரக பொது கூட்டத்தில்
26 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)ஜின்னாவுடன்
27 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)மஹாத்மாவின் பிரபலமான புன்சிரிப்பு
28 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)தன்னை பின் பற்றுபவர்களுடன் உப்பு சத்தியாகிரகத்தில்
29 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)ஒரு சிறுவன் மஹாதமாவின் கை தடியை பிடித்து அவரை முன் நடத்தி செல்கிறான்
30 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)
செய்தித்தாள் படித்துக்கொண்டு இருக்கும் போது
31 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)தளர்ந்து போன காலத்தில் கஸ்தூரிபாய் அவர்களுடன்
32 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)உண்ணாவிரத்தில்
33 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)கருணை பொங்கும் முகத்துடன்
35 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)இறுதிப்பயணம் icon sad மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)
34 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)
காலங்கள் பல கடந்தாலும் இன்னும் உலக மக்கள் அனைவராலும் விரும்பப்படும் மாமனிதர். எந்த வன்முறையிலும் இறங்காமல் ஆங்கிலேயர்களை அமைதியால் அடித்து நொறுக்கியவர். வீரன் என்பவன் கத்தியால் சாதிப்பவன் அல்ல அமைதியால் சாதிப்பவன் என்று உலகிற்கு உணர்த்தியவர்.

அண்ணல் வழி நடப்போம்

நமது நாட்டிற்கு பலாத்காரமற்ற முறையில் சுதந்திரம் சம்பாதித்துக் கொள்ளும் வழியைக் காட்டி, அந்த வழியில் பாடுபட்டு, சுதந்திரம் வாங்கிக்கொடுத்துவிட்டே மாண்டார் அண்ணல் காந்தி. மக்களுக்காவே அதிலும் குறிப்பாக ஏழை எளியவர்களுக்காகவே உத்தம வாழ்க்கை வாழ்ந்து மடிந்தார் மகான் காந்தி.

காந்திஜியின் உயரிய எண்ணங்கள் நனவாக்கப்பட வேண்டும். அவரது நல்ல இலட்சியங்கள் மக்களது மனதெங்கும் ஊறிப் பதியவேண்டும். எல்லோரும் நல்வாழ்வு பெறப்பாடுபட வேண்டும்.

மகான் காந்திஜியின் உயரிய எண்ணம் என்ன? எதற்காக வாழ்ந்தார்? பாடுபட்டார்? கண்டபலன்தான் என்ன? யோசித்துப் பார்க்க வேண்டும்.

வாழ்க்கைத்தரத்தில் மட்டுமல்லாமல் சமூக சமுதாய அந்தஸ்த்திலும் மக்கள் அனைவரும் சரி நிகர் சமானம் என்ற உணர்ச்சி நாடெங்கும் நிலவ வேண்டும். உயர்வு – தாழ்வு உணர்ச்சிக்கு வழியின்றி மக்கள் வாழ வேண்டும். அந்த மகத்தான சமுதாயம் உருவாக வேண்டும் என்ற இலட்சியத்தைப் பரப்ப வேண்டும்.

இந்த இலட்சியத்தை மக்களிடையே பரப்பி- சமதர்ம சமுதாயத்தை ஏற்படுத்தத்தான் மகான் காந்தி சுதந்திரம் வேண்டினார். பாடுபட்டுப் பெற்றுத் தந்தார். வேறு எதற்காக அவர் சுதந்திரம் வேண்டுமென்றார்? வேறெங்கும் இல்லை. மக்கள் அனைவரும் சுகமாக நல்வாழ்வு வாழத்தானே!
தன் நலன் கருதாது பிறர் நலனில் மட்டுமே அக்கறை காட்டிய இவர் மஹாத்மா என்று சொல்லுக்கு மிகப்பொருத்தமானவர்.