குழந்தையாக மோகன்தாஸ்










பொதுமக்களுடன் உரையாடல்





உப்பு சத்யாகிரகத்தில்





மானு மற்றும் அபாவுடன்
கான் அப்துல் கபார் கான் உடன் ஒரு நடை
மானுவும் அபாவும் மஹாத்மாவுக்கு தோள் கொடுத்து உதவுகிறார்கள்
மாதாத்மா நேருவுடன் ஒரு சந்தோஷ தருணத்தில்
முக்கிய கலந்துரையாடலின் போது






உப்பு சத்யாகிரக பொது கூட்டத்தில்





செய்தித்தாள் படித்துக்கொண்டு இருக்கும் போது






காலங்கள் பல கடந்தாலும் இன்னும் உலக மக்கள் அனைவராலும் விரும்பப்படும் மாமனிதர். எந்த வன்முறையிலும் இறங்காமல் ஆங்கிலேயர்களை அமைதியால் அடித்து நொறுக்கியவர். வீரன் என்பவன் கத்தியால் சாதிப்பவன் அல்ல அமைதியால் சாதிப்பவன் என்று உலகிற்கு உணர்த்தியவர்.
அண்ணல் வழி நடப்போம்
நமது நாட்டிற்கு பலாத்காரமற்ற முறையில் சுதந்திரம் சம்பாதித்துக் கொள்ளும் வழியைக் காட்டி, அந்த வழியில் பாடுபட்டு, சுதந்திரம் வாங்கிக்கொடுத்துவிட்டே மாண்டார் அண்ணல் காந்தி. மக்களுக்காவே அதிலும் குறிப்பாக ஏழை எளியவர்களுக்காகவே உத்தம வாழ்க்கை வாழ்ந்து மடிந்தார் மகான் காந்தி.
காந்திஜியின் உயரிய எண்ணங்கள் நனவாக்கப்பட வேண்டும். அவரது நல்ல இலட்சியங்கள் மக்களது மனதெங்கும் ஊறிப் பதியவேண்டும். எல்லோரும் நல்வாழ்வு பெறப்பாடுபட வேண்டும்.
மகான் காந்திஜியின் உயரிய எண்ணம் என்ன? எதற்காக வாழ்ந்தார்? பாடுபட்டார்? கண்டபலன்தான் என்ன? யோசித்துப் பார்க்க வேண்டும்.
வாழ்க்கைத்தரத்தில் மட்டுமல்லாமல் சமூக சமுதாய அந்தஸ்த்திலும் மக்கள் அனைவரும் சரி நிகர் சமானம் என்ற உணர்ச்சி நாடெங்கும் நிலவ வேண்டும். உயர்வு – தாழ்வு உணர்ச்சிக்கு வழியின்றி மக்கள் வாழ வேண்டும். அந்த மகத்தான சமுதாயம் உருவாக வேண்டும் என்ற இலட்சியத்தைப் பரப்ப வேண்டும்.
இந்த இலட்சியத்தை மக்களிடையே பரப்பி- சமதர்ம சமுதாயத்தை ஏற்படுத்தத்தான் மகான் காந்தி சுதந்திரம் வேண்டினார். பாடுபட்டுப் பெற்றுத் தந்தார். வேறு எதற்காக அவர் சுதந்திரம் வேண்டுமென்றார்? வேறெங்கும் இல்லை. மக்கள் அனைவரும் சுகமாக நல்வாழ்வு வாழத்தானே!
தன் நலன் கருதாது பிறர் நலனில் மட்டுமே அக்கறை காட்டிய இவர் மஹாத்மா என்று சொல்லுக்கு மிகப்பொருத்தமானவர்.
No comments:
Post a Comment